தீட்டு என்ற சாமியாரின்  வாய்க்கு பூட்டு -மாதவிடாய் நின்ற பெண்களின் ‘பீரியட் பீஸ்ட்’….

 

தீட்டு என்ற சாமியாரின்  வாய்க்கு பூட்டு -மாதவிடாய் நின்ற பெண்களின் ‘பீரியட் பீஸ்ட்’….

புதுடெல்லியில்  குடும்ப மேலாண்மை குறித்த சொற்பொழிவின் போது, சுவாமிநாராயண் பூஜ் மந்திரைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி, ஒரு பெண் மாதவிடாய் இருக்கும்  போது கணவருக்கு உணவு சமைத்தால், அவர் ஒரு முறையற்ற பெண்ணாக மறுபிறவி எடுப்பார் என்று கூறினார்.

புதுடெல்லியில்  குடும்ப மேலாண்மை குறித்த சொற்பொழிவின் போது, சுவாமிநாராயண் பூஜ் மந்திரைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி, ஒரு பெண் மாதவிடாய் இருக்கும்  போது கணவருக்கு உணவு சமைத்தால், அவர் ஒரு முறையற்ற பெண்ணாக மறுபிறவி எடுப்பார் என்று கூறினார். இதனால் குஜராத்தில் ஸ்ரீ சஜ்ஜானந்த் பெண்கள் நிறுவனத்தின் பல  பெண்கள் கூட மாதவிடாய் இருக்கிறதா என சோதனை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானது .அந்த வீடியோ வைரலானதால் அந்த கல்லூரி முதல்வர் மற்றும் சில நிர்வாகிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

period-feast

ஆணாதிக்கத்தோடு கூறிய அந்த சாமியாரின் கருத்தை உடைப்பதற்காகவும் ,மூடநம்பிக்கையை ஒழிக்கவும்  ஞாயிற்றுக்கிழமை, டெல்லியின் மயூர் விஹாரில் சச்சி சஹேலி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மாதவிடாய் நின்ற பெண்களை வைத்து  ‘பீரியட் விருந்து’ சமைத்து சுமார் 300 பேருக்கு உணவளிக்கும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
டெல்லியின் மயூர் விஹாரில் 28 மாதவிடாய் நின்ற பெண்கள் சேர்ந்து  உணவு சமைத்து, 300 பேருக்கு விருந்து  வைத்து அந்த சாமியார் கூறிய கருத்துக்கு  சவால் விட்டனர்.

period-feast-90

மாதவிடாயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை ஒழிக்க  உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்