தீக்கிரையான 200 இஸ்லாமியர்களின் இல்லங்கள்; காவல்துறை மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

 

தீக்கிரையான 200 இஸ்லாமியர்களின் இல்லங்கள்; காவல்துறை மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

200 இஸ்லாமியர்களின் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்கள் காவல்துறையின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

மீரட்: 200 இஸ்லாமியர்களின் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்கள் காவல்துறையின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தர  பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள சேரிப் பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றும் பணிக்காக அதிகாரிகள் வந்த வேளையில், குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் சமூக விரோதிகள் சிலர் கொளுத்துவிட்டதாக கூறி 6 இஸ்லாமியர்களை கைது செய்துள்ளனர். மேலும் தங்கள் மீது கல் வீசப்பட்டதாகவும் கூறுகின்றனர். 

இதுகுறித்து கேரவன் டெய்லி பத்திரிகைக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர் ராஜிவ் யாதவ், உத்தர பிரதேச மாநிலத்தில் மெல்ல மெல்ல மதவாதம் மேலோங்கி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இங்கே புதிதல்ல, மீரட் முக்கியமான நகரம் என்பதால் இந்த பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பெரும்பான்மையான வழக்குகளில் இஸ்லாமியர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளுகிறார்கள். அவர்களுக்கு தேச விரோதி பட்டம் கொடுத்துவிடுகிறார்கள், இங்குள்ள பிரச்சனை பெரியது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத காவல்துறைதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது என கூறியுள்ளார்.