தி.மு.க-வுடன் உறவு, பிரஷாத் கிஷோருக்கு கருப்புப் புள்ளியாக அமையும் – பொன் ராதாகிருஷ்ணன் சாபம்!

 

தி.மு.க-வுடன் உறவு, பிரஷாத் கிஷோருக்கு கருப்புப் புள்ளியாக அமையும் – பொன் ராதாகிருஷ்ணன் சாபம்!

இதனால், தி.மு.க கூட்டணிக்கு பிரஷாந்த் கிஷோர் சென்றதை அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.இது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகவே தன்னுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டினார்.

பிரஷாத் கிஷோரின் தி.மு.க கூட்டு அவருக்கு கருப்புப் புள்ளியாக அமையும் என்று பொன் ராதாகிருஷ்ணன் வயிற்றெரிச்சலுடன் கூறியிருப்பதை தி.மு.க-வினர் ரசித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆலோசனை வழங்க, தேர்தல் வியூகம் அமைக்க பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் தி.மு.க ஒப்பந்தம் செய்துள்ளது. இது தமிழக எதிர்க்கட்சிகளுக்குக் கிலியை ஏற்படுத்தியது.

stali

பிரஷாந்த் கிஷோரை தங்கள் அணிக்கு இழுத்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க முடிந்த வரை போராடியது. இருப்பினும் தி.மு.க வெற்றி பெற்றது. இதனால், தி.மு.க கூட்டணிக்கு பிரஷாந்த் கிஷோர் சென்றதை அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
இது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகவே தன்னுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டினார். சென்னையில் அவர் பேட்டி அளித்தபோது, “பிரஷாந்த் கிஷோர் உடனான தி.மு.க உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியைப் போன்றது. இது பிரஷாந்த் கிஷோரின் வாழ்வில் ஒரு கருப்புப் புள்ளியாகவே இருக்கும்” என்றார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பிரஷாந்த் கிஷோர் – தி.மு.க கூட்டணியை விமர்சித்து வருவதை தி.மு.க தொண்டர்கள் ரசித்து வருகின்றனர். இப்போதே தங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது என்று தங்கள் சமூக ஊடக பக்கங்களில் மகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.