தி.மு.க-வுக்கு பெரிய அறையை பறித்துக் கொடுத்த நாடாளுமன்ற சபாநாயகர்! – அதிர்ச்சியில் அ.தி.மு.க எம்.பி-க்கள்!

தி.மு.க-வுக்கு பெரிய அறையை பறித்துக் கொடுத்த நாடாளுமன்ற சபாநாயகர்! – அதிர்ச்சியில் அ.தி.மு.க எம்.பி-க்கள்!

2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 37 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், அந்த கட்சிக்கு 10க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்ததால், மூன்றாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் அதற்கு நாடாளுமன்றத்தில் பிரம்மாண்ட அறை ஒதுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட அறை இப்போது தி.மு.க-வுக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க எம்.பி-க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 37 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், அந்த கட்சிக்கு 10க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்ததால், மூன்றாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் அதற்கு நாடாளுமன்றத்தில் பிரம்மாண்ட அறை ஒதுக்கப்பட்டது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 38 இடங்களைப் பிடித்தது. அ.தி.மு.க-வுக்கு தேனி மட்டுமே கிடைத்தது. மேலும் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க இருந்தது. இதனால், தி.மு.க-வுக்கு நாடாளுமன்றத்தில் அறை ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் கோரிக்கைவிடப்பட்டது.

dmk-in-parliament

ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் உள்ள கட்சிக்கு எதற்கு இவ்வளவு பெரிய அறை… எனவே, அறையை காலி செய்து அளிக்கும்படி அ.தி.மு.க -வுக்கு நாடாளுமன்ற அலுவலகம் கேட்டுக்கொண்டது. ஆனால், அந்த அறையை காலி செய்ய அ.தி.மு.க எம்.பிக்கள் மறுப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வேறு ஒரு நல்ல அறையை ஒதுக்கித் தருகிறேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த 46ஐ அறையை அ.தி.மு.க காலி செய்து கொடுத்துள்ளது. அந்த அறை தற்போது தி.மு.க-வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வுக்கு கீழ் தளத்திலேயே வேறொரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் இது நாள் வரை தெலுங்கு தேசம் கட்சி பயன்படுத்தி வந்த அறையை 22 இடங்களில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது நாடாளுமன்ற செயலகம்.