தி.மு.க-வின் வெற்றியை மறைக்க அ.தி.மு.க அரசு சதி! – ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க-வின் வெற்றியை மறைக்க அ.தி.மு.க அரசு சதி! – ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 80 சதவிகித இடங்களில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க அரசு முயற்சி செய்து வருவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 80 சதவிகித இடங்களில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க அரசு முயற்சி செய்து வருவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஊராட்சி பகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க கூட்டணியும், ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளதாக முதல்கட்ட செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்க அ.தி.மு.க முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின் பின்னர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, “தி.மு.க கூட்டணி 80 சதவிகித இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், அதை தடுக்க வேண்டுமென அ.தி.மு.க-வினரும் அதிகாரிகளும் திட்டமிட்டு சதி செய்துகொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் தி.மு.க-வினர் வெற்றிபெற்றுவிட்டபோதும் அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.