தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! – சாட்டை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்?

 

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! – சாட்டை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்?

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது. வழக்கம்போல சர்வாதிகாரி, சாட்டை எடுப்பேன் என்று பேசுவாரா அல்லது உண்மையில் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது. வழக்கம்போல சர்வாதிகாரி, சாட்டை எடுப்பேன் என்று பேசுவாரா அல்லது உண்மையில் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க-வின் பொய் பிரசாரம், அ.தி.மு.க-வின் ஆட்சி அதிகாரம் என அனைத்தையும் தாண்டி மக்கள் மத்தியில் தி.மு.க தனி செல்வாக்கைப் பெற்றிருப்பதை நாடாளுமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் வெளிப்படுத்தியுள்ளன. மக்கள் வாக்களிக்கத் தயாராக இருந்தாலும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் தி.மு.க -வின் தோல்விக்கு காரணமாகிவிடும் என்ற நிலை உள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக கவுன்சிலர்களைப் பெற்றும் சேர்மன் பதவியை பெற முடியாமல் போனதற்கு இந்த உட்கட்சி கோஷ்டி பூசலே காரணம் என்று கூறப்படுகிறது.

ttn

அடுத்து நடைபெற உள்ள நகர்ப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற இப்போதே கடும் பணிகள் தொடங்க வேண்டியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த வெற்றி தி.மு.க-வினருக்கு மதமதப்பைக் கொடுத்துள்ளது. மேலும் திருச்சியிலிருந்து நேரு, சேலத்திலிருந்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா மாநில அளவிலான பணிக்கு அழைக்கப்பட்டனர். வேலுவின் விசுவாசியும் நிதி முறைகேடு பிரச்னையில் சிக்கியவருமான சிவானந்தத்தின் பதவி பறிக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களால் உட்கட்சி பூசல் அதிகமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

ttn

இவை எல்லாம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்தால் அ.தி.மு.க கூட்டணி மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும். இதனால் கட்சியைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் இன்று மாவட்டச் செயலாளர் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடக்கிறது. வழக்கம்போல சர்வாதிகாரியாக மாறுவேன், சாட்டையால் சுழற்றுவேன் என்று பேச்சோடு நிற்காமல் மு.க.ஸ்டாலின் செயலில் இறங்கி அதிரடி காட்ட வேண்டும் என்று தி.மு.க தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். செய்வாரா ஸ்டாலின்?