தி.மு.க பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்! – விரைவில் கூடுகிறது பொதுக்குழு

 

தி.மு.க பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்! – விரைவில் கூடுகிறது பொதுக்குழு

தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ம் தேதி காலமானார். 43 ஆண்டுகள் அவர் தி.மு.க பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி தி.மு.க-வில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் ஒருவரை உடனடியாக தேர்ந்தெடுக்க வேண்டும்

தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு துரைமுருகன் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

duraimurugan-with-stalin

தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ம் தேதி காலமானார். 43 ஆண்டுகள் அவர் தி.மு.க பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி தி.மு.க-வில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் ஒருவரை உடனடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் உள்கட்சி தேர்தல்கள் மூலமாகவே நிரப்பப்பட வேண்டும். தற்போதுதான் உட்கட்சி தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால் அதற்கு முன்னதாகவே பொதுக்குழுவை கூட்ட வேண்டியது அவசியமாகி உள்ளது.

dmk-meeting

பேராசிரியர் மறைவையொட்டி ஒரு வாரத்துக்கு தி.மு.க-வின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுக் குழு கூடி பொதுச் செயலாளராக துரைமுருகனையும் பொருளாளராக எ.வவேலுவையும் தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. பொருளாளர் பதவிக்கு கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோரும் போட்டி போடுவதாகவும் ஆனால் எ.வ.வேலு பெயரை மு.க.ஸ்டாலின் உறுதி செய்துவிட்டதாகவும் தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.