தி.மு.க பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்… பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்!

 

தி.மு.க பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்… பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்!

தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் கடந்த 7ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து பொருளாளர் பதவியில் உள்ள துரைமுருகன் தி.மு.க பொதுச் செயலாளர் ஆவார் என்ற பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து வருகிற 29ம் தேதி தி.மு.க பொதுக் குழு கூடி புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

தி.மு.க பொதுச் செயலாளராக பதவி ஏற்பதற்காக தன்னுடைய பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் கடந்த 7ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து பொருளாளர் பதவியில் உள்ள துரைமுருகன் தி.மு.க பொதுச் செயலாளர் ஆவார் என்ற பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து வருகிற 29ம் தேதி தி.மு.க பொதுக் குழு கூடி புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் அன்றைய தினம் தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

anbazhagan

இதன் மூலம் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் வருவார் என்பது உறுதியானது. இந்த நிலையில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தன்னுடைய விருப்பத்தை துரைமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அவர் பொருளாளர் பதவியிலிருந்து விலகுகிறார். வருகிற 29ம் தேதி காலை 1 மணிக்கு தி.மு.க பொதுக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தல் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

stalin

29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்படுவார் என்று தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன. பொருளாளராக ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு, பொன்முடி என மூன்று பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அனைத்தும் தலைமை முடிவெடுத்துவிட்டு, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று கூறுவது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.