தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

 

தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி தொடர்பான அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக-வுடன் கூட்டணி தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தி வருகிறது.

அதேபோல், திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, மதிமுக-வுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியும், வரும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.