தி.மு.க கட்சியின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்

 

தி.மு.க கட்சியின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்

தி.மு.க கட்சியின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: தி.மு.க கட்சியின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேருவுக்கு சுமார் 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளது. அவர் 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். மேலும் திருச்சியில் தி.மு.கவின் முக்கிய தலைவராக அவர் இருக்கிறார்.

இந்நிலையில், தி.மு.க கட்சியின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்த டி.ஆர்.பாலு, தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு பதிலாக கே.என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களையும் தி.மு.க கட்சி கைப்பற்றியது. இதன் காரணமாகவே கே.என்.நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.