தி.மு.க எம்.பி-யின் பல்கலையை அரசுடைமையாக்க வேண்டும்! – எச்.ராஜா வலியுறுத்தல்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அதை அரசுடைமையாக்க வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாக உள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் போக்கி, தற்கொலை முடிவு எடுப்பதைத் தவிர்க்க கவுன்சலிங் தரப்படுகிறது என்று ஆயிரம் சமாதானங்களை பல்கலைக் கழக நிர்வாகம் கூறினாலும், தற்கொலைகள் மட்டும் நிற்கவில்லை.

எஸ்.ஆர்.எம் பல்கலையை அரசுடைமை ஆக்க வேண்டும் – எச்.ராஜா சொல்கிறார்
எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அதை அரசுடைமையாக்க வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாக உள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் போக்கி, தற்கொலை முடிவு எடுப்பதைத் தவிர்க்க கவுன்சலிங் தரப்படுகிறது என்று ஆயிரம் சமாதானங்களை பல்கலைக் கழக நிர்வாகம் கூறினாலும், தற்கொலைகள் மட்டும் நிற்கவில்லை.

srm-university.jpg

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஹாஸ்டல் ரூமில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான செய்தியை ட்விடடரில் பகிர்ந்துள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, “இக்கல்லூரியை அரசுடைமை ஆக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் சென்னை ஐஐடி-யில் மாணவி தற்கொலை செய்தபோது வாய் திறக்காத எச்.ராஜா தற்போது மட்டும் வாய் திறப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தை நிறுவிய பாரிவேந்தர் பச்சமுத்து தற்போது தி.மு.க எம்.பி-யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.