தி.மு.கவில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.கவில் சேர்ந்தார் கருப்பசாமி பாண்டியன் !

 

தி.மு.கவில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.கவில் சேர்ந்தார் கருப்பசாமி பாண்டியன் !

மூன்று முறை ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருந்தார். 

கருப்பசாமி பாண்டியன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்தார். 1977 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அவருக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர், மூன்று முறை ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருந்தார். 

ttn

அதனையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். அந்த கட்சியிலும் அவருக்கு, நெல்லை மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கும் சில பிரச்சனைகளின் காரணமாக விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சசிகலா அதிமுகவைக் கைப்பற்றிய நேரத்தில், அதாவது 2018 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் திமுகவிலிருந்து விலகி நேற்று இரவு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்குச் சென்று மலர்க்கொத்து வழங்கி தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.