திவ்யா ஸ்பந்தனா பதவியை வேறு ஒருவருக்கு அளித்தது காங்கிரஸ்…

 

திவ்யா ஸ்பந்தனா பதவியை வேறு ஒருவருக்கு அளித்தது காங்கிரஸ்…

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக திவ்யா ஸ்பந்தனாவை ராகுல் காந்தி நியமனம் செய்தார்.

பிரபல நடிகையான திவ்யா ஸ்பந்தனா தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கர்நாடகம் மாண்டியா பகுதியில் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டு பிறகு 2014 ல் தோல்வியடைந்தார்.

Divya spandana

அதன் பின், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக திவ்யா ஸ்பந்தனாவை ராகுல் காந்தி நியமனம் செய்தார். பல விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்ப்பு குறித்து சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவராக இருந்தார்.

Congress

மக்களைவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதன் எதிரொலியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக இருந்த திவ்யா, தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ட்விட்டேர் பக்கத்திலிருந்தும் விலகினார். இதனையடுத்து, திவ்யா ஸ்பந்தனாவுக்கு பதிலாக ரோஹன் குப்தா  என்பவரைக் காங்கிரஸ் நியமித்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.