தில்லியில் பொது இடங்களில் இனி ‘நமாஸ்’ செய்ய தடை

 

தில்லியில் பொது இடங்களில் இனி ‘நமாஸ்’ செய்ய தடை

தில்லியில் பள்ளிவாசல், தர்காக்களைத் தவிர பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதியில்லை என காவல்துறை எச்சரிக்கை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது

புதுதில்லி: தில்லியில் பள்ளிவாசல், தர்காக்களைத் தவிர பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதியில்லை என காவல்துறை எச்சரிக்கை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

புதுதில்லியில் பிஸியான தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் சாலைகளில் வெள்ளிக்கிழமை உள்பட முக்கியமான பண்டிகை நாள்களில் முஸ்லிம்கள் சாலையின் நடுவில் தொழுகை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுவதாக போலீஸாருக்குப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து விசாரணை நடத்தி முடித்த போலீஸார் பொதுஇடங்களில் கும்பலாக தொழுகை நடத்துவதற்கு அனுமதியில்லை. அதேபோல தொழில்நிறுவனங்களிலும் வேலைநேரங்களில் தொழுகை நடத்து அனுமதிக்கக் கூடாது என போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள் தங்களுக்கு பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கும்படி தில்லி  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அனுமதி அளிக்க ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளையும் பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது. அதனால் நொய்டாவில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள், அங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.