திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து!

 

திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து!

தேர்தலில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது

சென்னை: திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

vote

இதையடுத்து, அசாம் (5), பிகார் (5), சத்தீஸ்கர் (3) ஜம்மு-காஷ்மீர் (2), கர்நாடகா (14), மகாராஷ்டிரா (10) மணிப்பூர் (1), ஒடிசா (5), புதுச்சேரி (1), தமிழகம் (39), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), மேற்குவங்கம் (3) உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி (நாளை) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது.

election commission

தேர்தலில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிங்க

தி.மு.க -அ.தி.மு.க ரெண்டுக்கும் கொஞ்சமாவது புத்தி வந்திருக்கும்னு நினைக்கிறேன் -கமல்ஹாசன்!