திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

 

திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

சென்னை: தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி அன்றும் அதற்கு அடுத்த 7, 8 மற்றும் 9 தேதிகளிலும்  திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், தீபாவளி நாள் மட்டுமின்றி, அதற்கடுத்த 3 நாட்களுக்கும் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்பு செய்யலாம். சிறப்பு காட்சிகள் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.