திரைப்பட டிக்கெட் விற்பனை செய்வதற்கு செயலியை உருவாக்குகிறது அரசு?

 

திரைப்பட டிக்கெட் விற்பனை செய்வதற்கு செயலியை உருவாக்குகிறது அரசு?

திரைப்படங்களைத் திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஆன்லைனில் புக் செய்தால் கூட சேவைக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப் படுகிறது என்றும் புகார்கள் எழுந்தன. 

திரைப்படங்கள் வெளியாவதும் மக்கள் அதை கண்டு ரசிப்பதும் தமிழகம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் வழக்கம். ஆனால் திரைப்படங்களைத் திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஆன்லைனில் புக் செய்தால் கூட சேவைக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப் படுகிறது என்றும் புகார்கள் எழுந்தன. 

Minister Kadambur raju

இதற்குத் தமிழக அரசு தீர்வு காணும் விதமாக, திரைப்பட டிக்கெட்டுகளை செயலி மூலம் அரசே விற்கப் போவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்திருந்தார். அதற்கான ஆலோசனைக் கூட்டமும் ஏற்கனவே  நடைபெற்றது. 

அதனையடுத்து, இரண்டாவது முறையாக இன்றும் செயலி மூலம் அரசே டிக்கெட்டுகளை விற்பனை செய்வது குறித்தும், செயலியை உருவாக்குவது குறித்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், திரைப்பட தயாரிப்பாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.