திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

 

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் வடபழனி கமலா திரையரங்கில் ஜூன் 10 ஆம் நடைபெற்றது.  விக்ரமன் மற்றும்  செல்வமணி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் இயக்குனர்  பாரதிராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  சங்க தலைவராக பாரதிராஜா அடுத்தமாதம் பதவியேற்கவுள்ளார்.  இந்நிலையில் இயக்குனர் சங்க தேர்தல் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 1 பொருளாளர், 4 இணைச்செயலாளர் 12 செயற்குழு உறுப்பினர்கள்  ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.