திரைத்துறை பிரபலங்களை மோதவிடும் ‘ஜெய் ஸ்ரீ ராம்‌’!

திரைத்துறை பிரபலங்களை மோதவிடும் ‘ஜெய் ஸ்ரீ ராம்‌’!

மதத்தின் பெயரால் வன்முறை நடப்பதாக இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட 62 பிரபலங்கள் திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிடச் சொல்லி வன்முறையை சிலர் தூண்டுவதாகவும் சிறுபான்மையினர் அடித்துக் கொல்லும் சம்பவங்களை நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரபல இயக்குனர்கள் அடூர் கோபாலகிரூஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை அபர்ணா சென் உள்ளிட்ட 49 திரைத்துறை பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்தியத் தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசுன் ஜோஷி, நடிகை கங்கனா ரணாவத், ராஜ்யசபா எம்பியும் நாட்டியக் கலைஞருமான சோனல் மான்சிங் ஆகிய 62 பேர் கடிதம் எழுதியுள்ளனர். இதில், நக்சல் அமைப்பினரால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டபோதும், பிரிவினைவாதிகள் காஷ்மீர் பள்ளிக‌ளை தீக்கு‌ இறையாக்கிய போதும் அமைதியாக இருந்தவர்கள்தான் தற்போது மோடிக்கு மதத்தின் பெயரால் வன்முறை நடப்பதாகக் கடிதம் எழுதியுள்ளவர்கள் எனச் சாடியுள்ளனர். ஜெய் ஸ்ரீ ராம் விவகாரம் அரசியல் வட்டாரத்த‌ல் விவாதங்களை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது திரையுலகினர் மத்தியிலும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.