திரைத்துறையில் திறமைகளை சரியாக பயன்படுத்துங்கள்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!

 

திரைத்துறையில் திறமைகளை சரியாக பயன்படுத்துங்கள்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!

இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகும் படங்களை பொதுமக்கள் பார்க்க வேண்டாம், என கனா திரைப்படத்தின் இயக்குநர்  அருண்ராஜா காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்: இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகும் படங்களை பொதுமக்கள் பார்க்க வேண்டாம், என கனா திரைப்படத்தின் இயக்குநர்  அருண்ராஜா காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான “கனா”,கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குளில் வெளியானது . இப்படத்தை “நெருப்புடா” பாடல் மூலம் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். மகளிர் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

kanaa

இந்நிலையில் கனா திரைப்படத்தின் இயக்குநர்  மற்றும் நடிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். 

kanaa

சேலத்தில் கனா திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்குப் பட இயக்குநர் மற்றும்  நடிகர்கள் குழுவினர் நேற்று நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரைப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், ‘தமிழகம் மற்றும் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டை வைத்து இதுவரை யாரும் திரைப்படம் எடுக்கவில்லை. இதனிடையே முதல்முறையாக தமிழ்மொழியில் மகளிர் கிரிக்கெட் குறித்து எடுக்கப்பட்ட எனது திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பலரின் உழைப்புக்கு பின்னால் வெளியாகும் திரைப்படங்களை சிலர் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். எனவே இணையதளத்தில் வெளியாகும் படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம்’. என்றார்.

kanaa

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பெண்களை மையமாகக் கொண்டு உலகத்திலேயே முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. பல பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்களுடைய கனவுகளையெல்லாம் நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். உங்கள் ரூபத்தில் எங்களை திரைப்படத்தில் கண்டு மகிழ்கிறோம் என கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரைத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்கள், தங்கள் திறமைகளை சரியாக பயன்படுத்தினால் வெற்றி பெறலாம்’. என்றார்.