திருவெற்றியூரில் பட்டப்பகலில் நகைக்கடையில் லட்சம் திருட்டு | கைவரிசை காட்டிய கில்லாடி பெண்கள்

 

திருவெற்றியூரில் பட்டப்பகலில் நகைக்கடையில் லட்சம் திருட்டு | கைவரிசை காட்டிய கில்லாடி பெண்கள்

வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 2 பெண்கள், 150 கிராம் நகைகள் இருந்த பெட்டியை திருடிச் சென்றுள்ளனர்.

வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 2 பெண்கள், 150 கிராம் நகைகள் இருந்த பெட்டியை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம்.  திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தருண்குமார் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இந்த கடைக்கு மதிய நேரத்தில், 2 பெண்கள் வந்தனர்.  அப்பொழுது தருண்குமார் மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கடையில் தருண்குமாரின் தந்தை இருந்தார். நகை வாங்குவதாக சொல்லி கடைக்குள் வந்த 2 பெண்களும் தருண்குமாரின் தந்தை மிசிறிலாலிடம் நகைகளை காண்பிக்கச் சொன்னார்கள். விதவிதமான நகைகளைப் பார்த்த பெண்கள், டிசைன் பிடிக்கவில்லை என்று சொல்லி சிறிது நேரத்தில் கடையில் இருந்து கிளம்பி விட்டனர். 

இரண்டு பெண்களும் கிளம்பியதும், மிசிறிலால் தான் காட்டிய நகைகளை சரிபார்த்த போது, 150 கிராம் நகைகள் இருந்த பாக்ஸ் மாயமாகி இருப்பது தெரிந்தது. இந்த நகைகளின் மதிப்பு சுமார் 5 லட்சும் ரூபாய். உடனே கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, நகையைக் காட்டுவதற்காக மிசிறிலால் திரும்பியிருந்த சமயத்தில், நகைகள் இருந்த பெட்டியை ஒரு பெண் எடுத்து பைக்குள் திணிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. உடனே ஏமாற்றி நகையைத் திருடிய பெண் குறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்து, சிசிடிவி கேமரா பதிவையும் கொடுத்தார். 

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகை கடைகள் அதிகம் இருக்கும் பகுதியில், பட்டப்பகலில் 2 பெண்கள் நகைகளை திடிருச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.