திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

 

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது

மதுரை: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. விதிமுறைகளின் படி, இந்த தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடதப்பட வேண்டும். ஆனால், இதுவரை தேர்தல் நடத்துவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து மதுரையை சேர்ந்த சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எப்போது நடத்துவீர்கள்? இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? இரு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த கால அட்டவணை ஏதும் உள்ளதா? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. அத்துடன், இது குறித்து வருகிற 26-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.