திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் அச்சம்: அதிரடி காட்டும் தினகரன்

 

திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் அச்சம்: அதிரடி காட்டும் தினகரன்

திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன என அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

பெங்களூரு: திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன என அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பலத்த வியூகங்கள் வகுத்து வருகின்றன. மேலும் அக்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகின்றனர். 

இதற்கிடையே திருவாரூரில் தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற ஒரு கருத்துக்கணிப்பும் உலா வருவதால் அக்கட்சி தொண்டர்கல் உற்சாகமடைந்து தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போல் திருவாரூர் இடைத்தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தேர்தலை ஒருசில கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் அமமுக தேர்தலை வரவேற்கிறது என்றார்.