திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவோமா? கமல்ஹாசன் விளக்கம்

 

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவோமா? கமல்ஹாசன் விளக்கம்

திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா போட்டியிடாதா என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா போட்டியிடாதா என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

திருவாரூர் தொகுதிகான இடைத்தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஈடான எதிர்பார்ப்பை இந்த தேர்தல் பெற்றுள்ளது. திமுக, அமமுக, அதிமுக ஆகிய கட்சிகள் திருவாரூர் தேர்தலுக்கான வேட்பாளரை இன்று அறிவிக்க உள்ளன. 

மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது. அதன் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அண்மையில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து மவுனம் சாதித்து வந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது குறித்து இன்னும் 2 தினங்களில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.