திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் உதயநிதி? பரபரப்பு தகவல்கள்

 

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் உதயநிதி? பரபரப்பு தகவல்கள்

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னாள் முதல்வரும், அரசியல் ஆளுமையான கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் அந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இருப்பை தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் நிரூபிக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 10-ம் தேதி கடைசி நாளாகும். இதனால் திமுக, அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளராக யார் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என சீனியர்கள் விரும்பியதாகவும் ஆனால் அதனை ஸ்டாலின் நிராகரித்துவிட்டார் எனவும் தகவல் வெளியாகியது. இருப்பினும் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபகாலமாக திமுக மேடைகளில் தென்பட்டு வரும் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

udhaya

இந்நிலையில், திருவாரூர் இடைதேர்தலில் திமுக சார்பில் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது ரசிகர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேசமயம், திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 40 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.