திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

 

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை  உயர் நீதிமன்றத்தில் காவிரி பாசன டெல்டா விவசாய சங்க தலைவர் சத்யநாராயணன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது தேர்தல் நடந்தால் அது பாதிக்கப்படும். மேலும், நிவாரண பணிகள் நடைபெறுவதால் இந்த தேர்தல் முடிவுகள் நிவாரணம் வழங்கும் கட்சிக்கு சாதகமாக முடியும். எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதாடினார். இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று கஜா புயல் நிவாரணத்தை வழங்கலாம் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.