திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

 

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்

சென்னை: திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி நடைபெட்ட்ற கூட்டத்தில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதனைத்தொடர்ந்து, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகள், பொதுமக்கள் விருப்பத்திற்கு இனங்கள் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள ஸ்டாலின், காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில்தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நோக்கம் இருக்கலாம் என ஏற்கனவே தான் சொல்லி இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், புயல் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு நிவாரண பணிகள் தடை பட்டு விடக் கூடாது என்பதே திமுக-வின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளார்.