திருவாரூர் இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர் குறித்து மவுனம் கலைத்த தம்பிதுரை

 

திருவாரூர் இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர் குறித்து மவுனம் கலைத்த தம்பிதுரை

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் 10-ம்தேதி அறிவிக்கப்படும் என தம்பிதுரை எம்.பி கூறியுள்ளார்.

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் 10-ம்தேதி அறிவிக்கப்படும் என தம்பிதுரை எம்.பி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திருவாரூரை தக்கவைக்க திமுகவும், அந்த தொகுதியை கைப்பற்ற அமமுகவும், அதிமுகவும் கோதாவில் இருப்பதால் இந்த தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் காமராஜூம் போட்டியிடுகின்றனர். ஆனால் ஆளும் கட்சியான அதிமுக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் யார் என வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 10-ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.