திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அதிமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஜெ.தீபா; என்ன சொல்கிறார் மாதவன்?

 

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அதிமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஜெ.தீபா; என்ன சொல்கிறார் மாதவன்?

திருவாரூர் தொகுதியில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: திருவாரூர் தொகுதியில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தபிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது

திருவாரூர் தொகுதியில் அதிமுக, அமமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என தற்போது நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. விசாரணைக்காக மாதவன் ஆணையத்தில் நேற்று ஆஜராகினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திருவாரூர் தொகுதியில் தீபா போட்டியிடுவது குறித்து, சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதி முடிவு சேலத்தில் 6-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும்’ என்றார்.