திருவாரூர் இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் அறிவிப்பு

 

திருவாரூர் இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ம் தேதி ஆகும். கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரை தக்க வைக்க திமுகவும், திருவாரூரை கைப்பற்ற அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் கோதாவில் இருப்பதால் இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக, அமமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் இன்று தங்களது வேட்பாளரை அறிவிக்கும் என அக்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூர் இடைத்தேர்தலில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். காமராஜ், அமமுக மன்னார்குடி மாவட்ட செயலாளர் ஆவார். அவர் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.