திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று

 

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை துவங்குகிறது

திருவாரூர்: திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை துவங்குகிறது.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 11-ம் தேதி நடைபெற்று, இறுதி பட்டியல் 14-ம் தேதி வெளியிடப்படும்.

திருவாரூர் தொகுதி கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம் திருவாரூரை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அதிமுகவும், அமமுகவும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படுகிறது. திமுக-வுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.