திருவாரூரில் போட்டியிடவில்லை: ஜெ.தீபா அதிரடி

 

திருவாரூரில் போட்டியிடவில்லை: ஜெ.தீபா அதிரடி

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திருவாரூரை தக்கவைக்க திமுகவும், அந்த தொகுதியை கைப்பற்ற அமமுகவும், அதிமுகவும் களத்தில் இருப்பதால் இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் காமராஜூம் போட்டியிடுகின்றனர். அதிமுக தனது வேட்பாளரை நாளை அறிவிக்க இருக்கிறது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ என் கட்சி சார்பிலோ யாரும் போட்டியிடவில்லை என கூறியிருக்கிறார்.