திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் இரண்டு  கட்டங்களாக  நடைபெற உள்ளது.

ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதே போல் நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய பஞ்சபூத ஸதலங்களில் நீர் ஸதலமாக விளங்கக்கூடிய  திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் என்று அழைக்கப்படும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற உள்ளது .

tiruvaanikaval

சைவ கோயில்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக உப சன்னதிகளான 45 பரிவார தெய்வங்களுக்கு பாலாலய பூஜை நேற்று நடந்தது. மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, மற்றும் விநாயகர் சன்னதிகளில் பாலாலய பூஜை வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. 

tiruvanaikal

இந்த நிலையில் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை கோயில் நிர்வாகம் நேற்று முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 9, மற்றும் 12-ந்தேதிகளில் இரண்டு  கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக 45 பரிவார தெய்வங்கள்,விமானங்களுக்கு டிசம்பர் மாதம் 9-ந்தேதி  காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். 

tiruvanaikal

இதற்காக யாகசாலை பூஜைகள் டிசம்பர் மாதம் 6-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் தொடங்குகின்றது.அதன்பின் அன்றைய தினம் மாலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் யாகசாலை பூஜைக்காக நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும்  செய்து வருகின்றனர்.