திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

 

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

நல்லவர்களுக்காகவும் நன்மைக்காகவும் பொய் சொல்லவும் தயங்கதா திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றியும் அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் பற்றியும் பார்ப்போம்.

ஒவ்வொரு ஜாதககாரருக்கும் உரிய நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய கிரகம் ஜாதகத்தில் கெடாது பலம் பெற்று இருக்கவேண்டும், அதாவது நட்சத்திரத்தின் அதிபதி ஆறு, எட்டு, அல்லது பன்னிரெண்டில் மறையக்கூடாது, நீசம் பெற்றிருக்ககூடாது,

ஆட்சி அல்லது உட்ச பலம் பெற்றிருக்கலாம் அல்லது கேந்திர, திரிகோணதில் இருக்கலாம், இப்படி பட்ட அமைப்பில் ஜாதகம் அமைந்து இருந்தால் ஜாதகர் ஜாதகத்தில் உள்ள எல்லாவிதமான யோகங்களை அனுபவிக்கலாம்.

siva

ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது நட்சத்திரமாக வருவது திருவாதிரை நட்சத்திரம் ஆகும். 27 நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ள முதல் நட்சத்திரம். சர்ப்ப கிரகங்களில், கருநாகம் என்று சொல்லக்கூடிய ராகுவின் சாரம் பெற்றுள்ள நட்சத்திரம்.

சர்ப்பத்துக்கு பிளவுபட்ட நாக்கு இருப்பது போல, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இரண்டு விதமாகப் பேசும் ஆற்றல் உள்ளவர்கள். சிறந்த சிவபூஜை செய்யும் பக்திமான்களாக இந்த நட்காத்திரகாரர்கள் வாழ்வார்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் பேசுபவர்களாக, பலசாலிகளாக, எளிதில் கோப வசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெற்றிகொள்ளும் சூரத்தனமும், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் பிடிவாதமும்  இவர்களிடம் நிரம்பியிருக்கும். 

siva

இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும்போதே உன்னிப்பாகப் பாடத்தை கவனித்து, தேர்வு சமயத்தில் மட்டும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்கள்.

உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆகவே, இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

காண்பதையெல்லாம் கவிதையாக்கும் அளவுக்கு கற்பனை வளம் இருக்கும்.

காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களாகவும் மனைவியை அதிகம் நேசிப்பவர்களாகவும் வாழ்க்கையை ருசித்து ரசிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

காரம் அதிகமுள்ள உணவுகளை ருசித்து உண்பார்கள். சமயோஜித புத்தி இருக்குமாதலால், இவர்களில் பலர்,புகழ்பெற்ற நிறுவனங்களின் பொருட்களை சாதுர்யமாக விற்பவர்களாகவும், நிலம், வீடு, விற்க வாங்க உதவும் தரகர்களாகவும் இருப்பார்கள்.

siva

மேலதிகாரியின் மனதைப் புரிந்துகொண்டு அவர்கள் விருப்பம் போல் நடந்து குறுகிய காலத்திலேயே அவர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். பலர், மடாதிபதிகளாக,பள்ளி, கல்லூரி தாளாளர்களாக விளங்குவார்கள். 

வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் :

திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அருணாசலேஸ்வரரை இந்த நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.

திருவொற்றியூர்  ஸ்ரீ வடிவுடையம்மன்  கோயில் சென்று வழிபாடு செய்வதும் மிகுந்த மேன்மை பயக்கும்.

ஸ்ரீ காளகஸ்தியில் அமைந்துள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வழிபாடு செய்வதும் யோகபலன்களை தரும்.

திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் உத்தமம் .