திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி.. பாதிப்பு பட்டியலில் 2ஆவது இடம்!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி.. பாதிப்பு பட்டியலில் 2ஆவது இடம்!

500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6,535 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவை விரைவில் கண்டறியும் ரேபிட் கிட்களை பயன்படுத்தினால் கொரோனா தடுப்பு பணி தீவிரமடையும் என்று கூறப்பட்ட நிலையிலும், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி வருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியது என்றே சொல்லலாம். நேற்று மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6,535 ஆக உயர்ந்துள்ளது.

ttn

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் தானாம். கொரோனா தொற்று அதிக அளவில் பரவிய சென்னையை அடுத்து கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் திருவள்ளூர் மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் இருக்கிறது.