திருவள்ளூர், சென்னையில் மதுபான கடைகள் திறக்கப்படாது! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

 

திருவள்ளூர், சென்னையில் மதுபான கடைகள் திறக்கப்படாது! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்படுகிறது.  கூட்டம் அலைமோதுவதை தடுக்க 7 நாட்களுக்கு 7 வண்ண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. கிழமை வாரியாக வழங்கப்படும் டோக்கன்களில் கிழமைக்கான வண்ண டோக்கன் உள்ளவர்கள் அதில் குறிப்பிட்ட நேரப்படி மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

token

காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மது விற்கப்படும். மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக விலகல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். டோக்கன் வழங்குவதற்கு தனித்தனி கவுன்டர்கள் இருக்கும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபான விற்பனை செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.