திருவனந்தபுரம் ராஜயோக நாற்காலியில் டிடிவி தினகரன்: பலிக்குமா முதல்வர் கனவு?

 

திருவனந்தபுரம் ராஜயோக நாற்காலியில் டிடிவி தினகரன்: பலிக்குமா முதல்வர் கனவு?

சென்னை: திருவனந்தபுரம் ராஜயோக நாற்காலியில் டிடிவி.தினகரன் அமர்ந்து வந்ததன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழக அரசியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். தனக்கு அதிமுக அமைச்சரவையில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள், எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பேன் என அவர் தொடர்ந்து கூறி வருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு வித சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  

 

இந்நிலையில் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவரான தினகரனுக்கு திருவனந்தபுரம் அரண்மனையில் இருக்கக்கூடிய ராஜயோக நாற்காலி குறித்து தெரியவந்துள்ளது. அந்த அரண்மனையின் ராஜயோக நாற்காலியில் அமர்ந்து செல்லும் அரசியல் ஆளுமைகள், பிரதமர் உள்ளிட்ட உச்ச பதவிகளை அடைய முடியும் என்பது ஐதீகம்.

 

அந்த ராஜயோக நாற்காலியில் அமர்ந்து சென்ற பின் தான்  நேருவும் மோடியும் இந்தியாவின் பிரதமாரானார்கள் என சிலரால் நம்பப்படுகிறது, அந்த வகையில் கடந்த வாரம் திருவனந்தபுரம் அரண்மனைக்கு சென்ற டிடிவி.தினகரனுக்கு அரண்மனை வாரிசுகள் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன்பின் ராஜயோக நாற்காலியில் அவரை அமர வைத்த அரண்மனை வாரிசுகள், “இந்த நாற்காலியில் அமர்ந்து விட்டீர்கள் அல்லவா ? இனி நீங்கதான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்” என கூறியுள்ளனர்.