திருவந்திபுரம் : புத்தாண்டு மற்றும் திருவோணம் நட்சத்திர வழிபாட்டிற்கு தயாராகும் தேவநாத சாமி கோயில்

 

திருவந்திபுரம் : புத்தாண்டு மற்றும் திருவோணம் நட்சத்திர வழிபாட்டிற்கு தயாராகும் தேவநாத சாமி கோயில்

திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் புத்தாண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை நடைபெறுகிறது . 

கடலூர் : 

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் தாயார் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். 

thiruvanthipurm

அதன்படி இந்த ஆண்டு செங்கமல தாயாருக்கு உற்சவம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது . இதையொட்டி நேற்று காலை செங்கமல தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது .

அதனையடுத்து மகா தீபாராதனை நிகழ்வும்  நடைபெற்றது. அதன் பின்னர் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் செங்கமல தாயாருக்கு காலையில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படும். அதன் பின்னர் மாலையில் சாமி வீதி உலாவும் நடைபெறும். 

 

thiruvanthipuram

ஆங்கில புத்தாண்டையொட்டி தேவநாத சாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து மார்கழி மாத பூஜையும் நடைபெறுகிறது. அதன் பின்னர் காலை 5.30 மணியில் இருந்து சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

இக்கோயிலில் வருகிற 7 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தன்று நடைபெறும் தாயார் உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும்.

thiruvanthipuram

எனவே இந்த நாளில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

புத்தாண்டு வழிபாட்டிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயிலில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.