திருவண்ணாமலை திமுக பொருளாளர் மீது நில மோசடி வழக்கு! – சிபிசிஐடி அதிரடி

 

திருவண்ணாமலை திமுக பொருளாளர் மீது நில மோசடி வழக்கு! – சிபிசிஐடி அதிரடி

சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனம், 2012ம் ஆண்டு திருவண்ணாமலையில் கிளை துவங்குவதற்கு, இடம் வாங்க முயன்றது. அப்போது பன்னீர்செல்வம் என்பவர் போலி வில்லங்க சான்று கொடுத்து மோசடி செய்து 1.75 கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க பொருளாளர் பன்னீர்செல்வம் மீது சிபிசிஐடி போலீசார் நில மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனம், 2012ம் ஆண்டு திருவண்ணாமலையில் கிளை துவங்குவதற்கு, இடம் வாங்க முயன்றது. அப்போது பன்னீர்செல்வம் என்பவர் போலி வில்லங்க சான்று கொடுத்து மோசடி செய்து 1.75 கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றுள்ளார். பணம் கொடுத்த பிறகு நிறுவனம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அப்போது, ராதா என்ற பெண் அந்த நிலத்தில் தனக்கு பங்கு இருப்பதாக முறையிட்டுள்ளார். 

faurd

இது குறித்து அந்த தனியார் நிறுவனம் பன்னீர்செல்வத்திடம் கேட்டுள்ளது. அதற்கு அவர், இந்த பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாகவும், தீர்க்க முடியாவிட்டால் தன்னுடைய மனைவி பெயரில் உள்ள 2.7 ஏக்கர் நிலத்தைத் தந்துவிடுவதாகவும் சமரசம் பேசியுள்ளார். இதற்குள் அவர் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க பொருளாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நிலத்தில் உள்ள பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அரசியல் அதிகாரத்தைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
வில்லங்க பிரச்னையை தீர்க்க 1 கோடி ரூபாய் கேட்டு தனியார் நிறுவனத்தை மிரட்டியுள்ளார். 
அதன் பிறகு நிலம் தொடர்பாக தனியார் நிறுவனம் விசாரணை நடத்தியது. அப்போது, பன்னீர்செல்வம், ராதா, மாதவி ஆகியோர் கூட்டு சேர்ந்து ஏமாற்றியது அவர்களுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் மூன்று பேர் மீதும் திருவண்ணாமலை போலீசாரிடம தனியார் நிறுவன மேனேஜர் புகார் அளித்தார். ஆனால் அரசியல் பின்புலம் காரணமாக திருவண்ணாமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தயங்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்த சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார்  திருவண்ணாமலை  மாவட்ட திமுக பொருளாளர் பன்னீர்செல்வம், அவர் மனைவி மாதவி மற்றும் கூட்டாளி ராதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.