திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா!  சுங்கவரி கட்டணம் விலக்கு – மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா!  சுங்கவரி கட்டணம் விலக்கு – மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவதையொட்டி வாகனங்களுக்கு சுங்கவரி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவதையொட்டி வாகனங்களுக்கு சுங்கவரி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  நாளை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். முக்கிய விழாவான மகா தீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி  நடைபெறுகிறது. அன்று மாலை  6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபம் ஏற்றப்படும். 

கார்த்திகை தீபம்

மகா தீப திருவிழாவை முன்னிட்டு, 351 கேமராக்களும், 8500 காவலர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் 2500 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அம்மாவட்டம் முழுவதும் வாகனங்களுக்கு சுங்கவரி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்களுக்கும் கால்நடை சந்தையின் போது கால்நடைகளுக்கும் நடைபாதை கடைகளில் சுங்கவரி என்று வசூலிக்கும் ஆட்கள் மீது குண்டர் சட்டம் பாயும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.