திருவண்ணாமலை ஆச்சி மெஸ்! அசரவைக்கும் அன் லிமிட்டெட் சாப்பாடு..!

 

திருவண்ணாமலை ஆச்சி மெஸ்! அசரவைக்கும் அன் லிமிட்டெட் சாப்பாடு..!

கிரிவலம் மட்டுமில்லை,கறிவலம் வரவும் ஏற்ற ஊர்தான் திருவண்ணாமலை.
பெரிய ரெஸ்டாரண்ட்கள் முதல சாலையோர வண்டிக்கடை வரை விதவிதமான உணவகங்கள் உள்ள ஊர் இது.அதில்,அவசியம் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒரு உணவகம் ஆச்சி மெஸ்.

கிரிவலம் மட்டுமில்லை,கறிவலம் வரவும் ஏற்ற ஊர்தான் திருவண்ணாமலை.
பெரிய ரெஸ்டாரண்ட்கள் முதல சாலையோர வண்டிக்கடை வரை விதவிதமான உணவகங்கள் உள்ள ஊர் இது.அதில்,அவசியம் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒரு உணவகம் ஆச்சி மெஸ்.

aachi mess

நீங்கள் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை,சந்நிதித் தெருவிலேயே இருக்கிறது.ஒரு பழையவீட்டை உணவகமாக மாற்றி இருக்கிறார்கள்.கிச்சன் முதல் கூரை வரை எந்த மாற்றமும் இல்லை.டேபிள்களும் சேர்களும்தான் மாற்றம்.கிச்சனில் பழங்கால பாணியில் மண்ணால் மெழுகப்பட்ட அடுப்புகளைத்தான் வைத்திருக்கிறார்கள்.மீன் பொரிப்பது முதல் எல்லா சமையலுமே இந்த விறகடுப்புகளில்தான் நடக்கிறது.

mess

பெரிய மெனுவெல்லாம் கிடையாது. இரண்டே காம்போதான்.
சைவசாப்பாடு, அசைவச்சாப்படு.நான் வெஜ்ஜிலும் ஏகப்பட்ட வெரைட்டியெல்லாம் இல்லை.180 ரூபாய் விலைவைத்து இருக்கிறார்கள் அசைவ சாப்பாட்டுக்கு.ஒரு பெரிய வாழை இலையைப் போட்டு ஏதாவது ஒரு பொரியலும்,வறுவலும் வைக்கிறார்கள்.அடுத்து ஒரு அவித்த முட்டை, பொரித்த மீன் துண்டு ஒன்று, கணிசமான சைசில் வருகிறது. அடுத்து ஒரு மட்டன் சுக்காவும் சிக்கன் சுக்காவும் தருகிறார்கள்.மீண்டும் ஒரு கணிசமான சைஸ் மீன் துண்டுடன் மீன் குழம்பும் வருகிறது.சோறு அன்லிமிட்டெட்.

food

உங்களுக்கி,சுக்காவோ , மீனோ மீண்டும் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளலாம்.அது இந்த 180 ரூபாயில் அடங்காது.அடுத்து நான்கு சிறிய கப்களில் மட்டன் , குழம்பு,ரசம்,மோர் வைக்கிறார்கள்.

food

இப்போது நீங்கள் கச்சேரியைத் துவங்கலாம்.இங்கு தரப்படும் சிக்கன் மற்றும் மட்டன் குழம்புகள் தேங்காய் அரைத்துச் சேர்த்தவை.கொஞ்சம் தண்ணியாக இருந்தாலும் இரண்டுமே மிகவும் சுவையாக இருக்கின்றன. மீன் பொரியல் கொஞ்சமும் கருகாமல்,இவர்களே அரைத்துச் செய்த மசாலா மனத்துடன் உங்களை அழைத்தாலும் முதலில் மீன்குழம்புடன் துவங்குங்கள்.அடுத்து சிக்கன் மட்டன் குழம்புகளை சுவைத்துப் பாருங்கள்.ஆனால்,கொஞ்சம் கவனம். அவர்கள் மீண்டும் மீண்டும் சோற்றை வைத்துக்  கொண்டே இருப்பார்கள், அதில் மயங்காமல்  வயிற்றில் கொஞ்சம் இடம் வையுங்கள்.

food

சிக்கன்,மட்டன் குழம்புகளை ருசிபார்த்த உடன் இன்னும் கொஞ்சம் சோற்றை வாங்கி அதில் ரசத்தை ஊற்றி நன்றாக பிசைந்து போதவில்லை என்றால் மேலும் கொஞ்சம் ரசம் வாங்கிக் கொள்வது நலம்.ரசமும் மிகவும் லைட்டாகவும்,அதிக புளிப்பில்லாமலும்தான் இருக்கிறது. இப்போது  அந்த பொரித்த மீனை பக்கத்துணையாக வைத்துக்கொண்டு ரசம் சோற்றை சாப்பிட்டுப் பாருங்கள்.இந்த ஆச்சி மெஸ்ஸில் எல்லா குழம்புகளும் சுவையாகவே இருந்தாலும்,மீன்குழம்பும் ரசமும்தான் முதலிடத்தில் இருக்கின்றன என்பது உங்களுக்கே புரியும்.தேவைப்பட்டால் இன்னொரு பொரித்த மீன் ஆர்டர் செய்து,மறுபடியும் சோறும்,ரசமும் வாங்கி கூச்சப்படாமல் வெளுத்துக் காட்டுங்கள்.