திருவண்ணாமலையில் முதன்முறையாக கி.யூ.ஆர் கோடுடன் பெயர்ப் பலகைகள் : அசத்தும் மாவட்ட நிர்வாகம்!

 

திருவண்ணாமலையில் முதன்முறையாக கி.யூ.ஆர் கோடுடன் பெயர்ப் பலகைகள் : அசத்தும் மாவட்ட நிர்வாகம்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் உதவியுடன், புதிதாகப் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் உதவியுடன், புதிதாகப் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. புதியதாக ஒரு இடத்துக்குச் செல்பவர்கள் எந்தெந்த இடங்கள் புகழ் பெற்றவை என்று தெரியாமல் குழம்புவர். அதனைக் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கி.யூ ஆர் கோடு பற்றி எல்லாருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும், பெயர்ப் பலகையில் அதைப் பொருத்துவது புது முயற்சி தான்.

ttn

திருவண்ணாமலையில் குடைவரை தூணாண்டார் கோயில், திருமால்பாடி அரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற இடங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 10 இடங்களில் கி.யூ.ஆர் கோடுடன் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல மேலும் 20 இடங்களில் பெயர்ப் பலகைகள் வைக்கப் பட உள்ளதாகவும், திருவண்ணாமலையில் இருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள இது பேருதவியாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

ttn

இதனைப் பற்றிப் பேசிய வரலாற்று ஆய்வு நடுவத்தின் மாவட்டச் செயலாளர், திருவண்ணாமலையின் பல இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய உள்ளது. அதனால், அதனை அறிந்து கொள்ளவும்  கி.யூ.ஆர் கோடு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.