திருவண்ணாமலையில் மகா தீபம்! ஏற்பாடுகள் தீவிரம்!

 

திருவண்ணாமலையில் மகா தீபம்! ஏற்பாடுகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் தீபத்தன்று மாலையில் மகா பரணி தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.  

திருவண்ணாமலையில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் தீபத்தன்று மாலையில் மகா பரணி தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.  இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த வருடம் மகா பரணி தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 

Deepam

டிசம்பர் 1ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு  அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  இதைத் தொடர்ந்து டிசம்பர் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.