திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்!

 

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் குபேர கிரிவலம் இன்று மாலை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை: 

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தியில் குபேரகிரிவலம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான குபேர கிரிவலம் திருவண்ணாமலையில் வெகு விமர்சையாக இன்று மாலை முதல்  கொண்டாடப்படுகிறது . 

siva

ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருவதாக ஐதீகம் .

அன்றைய தினம் குபேரன் வந்து  திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை பூஜை செய்வதாக நம்பப்படுகிறது . குபேர பூஜையினை தொடர்ந்து  இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார் என்பது ஐதீகம்.

sivan

அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்புடனும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

இன்று மதியம் 12:47 முதல் நாளை மதியம் 12:41 வரை சதுர்த்தி திதியில் குபேர கிரிவலம் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று, குபேரலிங்கத்திடம் பிரார்த்தனை செய்தால், நிரந்தர வேலை, தொழில் வளர்ச்சி, கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

sivan

அதன்படி,  இன்று மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள் திருவண்ணாமலை குபேரலிங்கத்துக்கு குபேர பூஜை செய்யப்படும் இந்த குபேர பூஜையில் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கிரிவலம் வந்து குபேரனை வழிபாடு செய்கின்றனர். 

அதனையடுத்து குபேர லிங்கம் இருக்கும் சன்னதியில் மாபெரும் அன்னதானமும் நடைபெறுகிறது. இந்த அற்புத ஆன்மீக நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அண்ணாமலையாரின் அருளினை பெறலாம்.