திரும்பத் திரும்ப ஜாமீன் கேட்டதால் கடுப்பான நீதிமன்றம் : அபராதம் விதித்து உத்தரவு

 

திரும்பத் திரும்ப ஜாமீன் கேட்டதால் கடுப்பான நீதிமன்றம் : அபராதம் விதித்து உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முதன்முதலாகத் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முதன்முதலாகத் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது. இதனையடுத்து, உதித் சூர்யாவும் அவரது தந்தையும் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

Court

திரும்பவும் கடந்த மாதம் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். அதில், மாணவர் உதித் சூர்யாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, உதித் சூர்யாவின் தந்தை தான் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முக்கிய குற்றவாளி என்பதால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேஷ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீண்டும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். திரும்பத் திரும்ப ஜாமீன் கேட்டதால் கடுப்பான நீதிமன்றம் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.