திருமாவின் காமக் கண்ணோட்டம்… நடிகை காயத்திரியிடம் விசிக வரம்பு மீறல்..!

 

திருமாவின் காமக் கண்ணோட்டம்…  நடிகை காயத்திரியிடம் விசிக வரம்பு மீறல்..!

திருமாவளவனை எதிர்த்து குரல் கொடுத்ததால் நடிகை காயத்ரி ரகுராமின் படங்களை ஆபாசமாக சித்தரித்து விசிகட்சியினர் சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

திருமாவளவனை எதிர்த்து குரல் கொடுத்ததால் நடிகை காயத்ரி ரகுராமின் படங்களை ஆபாசமாக சித்தரித்து விசிகட்சியினர் சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து, ’’தமிழ்நாட்டில் பதவி பணம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் கூட எதிர்க்க தயங்குகிற ஒரு கும்பலை ஒரு பெண்- அதுவும் முற்போக்கு சமூக நீதி என்கிற பேரில் வேட்டையாடப்படும் ஒரு இனத்தை சார்ந்த பெண், அவர்களுக்கு பழக்கமான பாணியில் பதிலடி கொடுத்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. மாநில அரசு காயத்ரி ரகுராமிற்கு பாதுகாப்பு தரவேண்டும்.

 சட்டத்துக்கு புறம்பான காரியங்களைச் செய்துவிட்டு சட்டத்தில் இருக்கும் சாதகமான பிரிவுகளை பயன்படுத்தியே தப்பித்து வரும் அராஜக கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுவும் நமது ஊடகங்களால் சமூகநீதி கணக்கின் கீழ் எழுதப்பட்டு விடும். இந்த ரவுடி கூட்டத்தின் கீழ்மட்ட பேச்சாளர்கள் ஆபாசக் கணைகளை யூடியூப்பில் பதிவேற்றியிருக்கிறார்கள். இதுதான் சாக்கு என்று மத்திய அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்களை உள்ளே தள்ளி இயக்கத்தை தடை செய்யவேண்டும். 

ஜனநாயகப் படுகொலை என்பார்கள். இந்த மாதிரி ரவுடிகளுக்கு அங்கீகாரம் தரும் ஜனநாயகம் இல்லாமலிருப்பதே நல்லது’’என காயத்ரிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர். 

’’திருமாவளவன் மட்டுமல்ல திமுகவும் இதில் வரம்பு மீறியுள்ளது. இதில் எந்த ஒரு முடிவையும் எட்டும் முன் நாம் வரலாற்றை சற்று ஆழமாக பேச வேண்டும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு முன்னர் முறையற்ற பாலுறவு குற்றம் என்னும் ஒன்றே கிடையாது. அது மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாக தான் இருந்திருக்கின்றது. கணவனுக்கு பல மனைவியரும், மனைவிக்கு பல கணவர்களும் போன இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை சமூகத்தில் பொதுவான ஒன்றாக தான் இருந்திருக்கிறது.

 அப்படிப்பட்ட வாழ்வியலின் அடிப்படையில் தான் அக்கால சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்றைய தவறு அன்றைய சரி. ஒருகாலத்தில் நம் முன்னோர்கள் கூட ஆடைகள் இன்றி நாகரீகம் அற்று தான் இருந்தார்கள் என்பது போலவும் கொள்ளலாம். மேலும் கலையும், சிற்ப வேலைகளும் நிர்வாணத்தை தாண்டிய ரசனை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

இன்றும் கூட ஓவிய கல்லூரிகளில் நிர்வாண மாடல்களை வைத்து சிற்ப வேலைகள் செய்யப்படுவது உண்டு. அதை கலைக்கண்ணோட்டத்தில் பார்த்தால் கலை அதை நீக்கி விட்டால் விபச்சாரம். இப்போது திமுகவும், திருமாவளவனும் என்ன எண்ணத்தில் கோவில் சிற்பங்களை காண்கிறார்கள் என்பது தான் என்னை பொறுத்தவரை உண்மையான பிரச்சனை. 

காமக்கண்ணோட்டத்தில் பார்த்தால் அது அசிங்கம் தான். சிற்பங்கள் மட்டும் அல்ல. அவர் மனமும், பார்வையும் கூடத்தான். குழந்தைக்கு பொதுவிடத்தில் வைத்து பால் ஊட்டும் சுதந்திரத்தை கூட பறித்த இந்த சமுதாயம் இதற்கு மேலும் பேசும். இது இந்து மதத்தில் மட்டும் அல்ல பிற மத சம்பந்தப்பட்ட கலைகளிலும் கூட இருந்த ஒன்று. பிரான்ஸ் போன்ற நாடுகளில் இன்றளவும் நிர்வாணம் குற்றமில்லை. மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, கிரேக்க , ரோம சிற்பங்களின் பெரும்பான்மையானவை அரச குடும்பத்தினரின் நிர்வாண சிற்பங்களே’’ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.