திருமழிசையில் தற்காலிக சந்தை: காய்கறிகள் விலை அதிரடியாக குறைந்தது!

 

திருமழிசையில் தற்காலிக சந்தை: காய்கறிகள் விலை அதிரடியாக குறைந்தது!

பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 699 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

அதேபோல் சென்னையில் 3330  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தை மூடப்பட்டு விட்டது.  இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் அதன் விலையும் அதிகரித்தது. இருப்பினும் இந்த நிலையே நீடிக்காது என்றும் திருமழிசை மார்கெட் செயல்பாடுகளுக்கு வந்த பிறகு காய்கறிகள் விலை குறையும் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை அரம்பிக்கப்பட்டுள்ளதால்  காய்கறிகள் விலை குறைந்துள்ளது. A,B,C,D என 4 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்து வரும் இங்கு சுமார் 200 கடைகள் உள்ளன. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு 450 லாரிகளில் 6000 டன் வரை காய்கறிகள் வந்துள்ளன. இங்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. வியாபாரிகள் மட்டுமே பாஸ் மூலம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

அதன்படி ஒரு கிலோ காய்கறிகளின் விலை விவரம் இதோ:-

  • தக்காளி -ரூ. 15 
  • உருளைக்கிழங்கு- ரூ. 25
  • பெரிய வெங்காயம் -ரூ.14
  • கத்தரிக்காய் – ரூ. 25, 
  • வெண்டைக்காய் – ரூ. 25,
  • முள்ளங்கி – ரூ. 25 
  • பீன்ஸ் -ரூ. 50
  • அவரைக்காய்-ரூ. 30
  • கேரட்-ரூ. 25
  • பீட்ரூட்-ரூ. 30
  • புடலங்காய்-ரூ. 20
  • பாவக்காய்-ரூ. 25
  • பச்ச மிளகாய்-ரூ. 30
  • கொத்த மல்லி, 
  • புதினா -ரூ. 10