திருமலையில் நாக சதுர்த்தியை முன்னிட்டு மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினர்

 

திருமலையில் நாக சதுர்த்தியை முன்னிட்டு மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு  நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மலையப்பன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினர்.

திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வருகின்ற வளர்பிறை சதுர்த்தி நாளில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி தினமான நேற்று மலையப்பன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

tirupathi

அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று நாகசதுர்த்தியை முன்னிட்டு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார். 

இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பெருமாளை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

இதனைஅடுத்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கமுடியாமல் சிலர் இரும்பு கேட்டுகளை உடைத்து சாமி தரிசனத்திற்கு செல்ல முயன்றனர். 

tirupathi12

தேவஸ்தான ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். கூட்டம் காரணமாக பக்தர்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள்,திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்கு சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.