திருமண பந்தம் எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும்?

 

திருமண பந்தம் எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும்?

திருமண பந்தம் எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும்?

7.09.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல்  8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை
சந்திராஷ்டமம் 
கார்த்திகை, ரோகிணி  
பரிகாரம்
தயிர்

மேஷம் 
வாழ்க்கையில் சீரியஸ் தன்மையை தவிர்த்திடுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உறவினர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தயாராக இருப்பார்கள். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்த கால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள்.  இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் 
உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.  மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 4

மிதுனம் 
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே நீண்ட நாட்களாக மனதில் அசைப்போடும் விஷயத்திற்கான முயற்சியைத் தொடங்குங்கள்.  பலன்கள் உண்டு.
அதிர்ஷ்ட எண்: 2

கடகம் 
தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். உங்கள் கருணைக்கும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் வெகுமதி கிடைக்கும். ஆனால் அவசரமாக முடிவெடுப்பது உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.  ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். 
அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்
தகராறு செய்யும் உங்கள் நடத்தையால் பகைவர்களின் பட்டியல் நீளும். நீங்கள் பின்னர் வருந்தக் கூடிய அளவுக்கு மற்றவர்கள் கோபம் கொள்வார்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். குழந்தைகள் அல்லது உங்களை விட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும். 

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி 
ஓய்வு முக்கியமான தேவையாக இருக்கும் நாள். சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இது அவசியம். நிலுவையில் உள்ள பிரச்சனைகள் மேலும் குழப்பமாக்கும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2

துலாம் 
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும், பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். 

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் 
சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்வது நிறைய நல்லதை செய்யும். 

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு 
தியானம் நிவாரணத்தைக் கொண்டு வரும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெற்றோரும் நண்பர்களும் முடிந்தவரை உதவுவார்கள்.  செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். 

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் 
 உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்து விடும் அபாயம் உண்டு. பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம். 

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் 
 ஆரோக்கியமான மனம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். எதற்காகவும் மனதைத் தளர விடாதீர்கள். நீங்கள் எண்ணியவைகள் எல்லாம் நிறைவேறும் நேரம் இது. நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்ததை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள். 

அதிர்ஷ்ட எண்:1

மீனம் 
உணர்வுரீதியாக எளிதில் பாதிக்கப்படுவீர்கள். எனவே நீங்கள் காயப்படக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தள்ளியிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். 

அதிர்ஷ்ட எண்: 8