திருமண ஆசை காட்டி தொழிலதிபரை ஏமாற்றிய ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி! புகாரை வாங்கக் கூட மறுத்த போலீஸ்

 

திருமண ஆசை காட்டி தொழிலதிபரை ஏமாற்றிய ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி! புகாரை வாங்கக் கூட மறுத்த போலீஸ்

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தொழிலதிபரை ஏமாற்றி பல லட்சங்கள் ஏமாற்றியதாக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி மீது சென்னை மாநகர போலீஷ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் கமிஷனரிடம் புகாரளித்ததாக தொழிலதிபர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தொழிலதிபரை ஏமாற்றி பல லட்சங்கள் ஏமாற்றியதாக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி மீது சென்னை மாநகர போலீஷ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் கமிஷனரிடம் புகாரளித்ததாக தொழிலதிபர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (39). இவர் சென்னை, மும்பை, துபாயில் குளோபல் டச் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். திருமணமாகி மனைவி தவறிவிட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை தன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பிசினசில் கவனம் செலுத்தியிருக்கிறார் பாலச்சந்தர்.

sentharamai

சில மாதங்களுக்கு முன்பு இவரது நிறுவனத்தில் செந்தாமரை என்கிற மயூரவர்ஷினி (46) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். பாலச்சந்தருக்கு உதவியாளர் என்பதால் நீண்ட நேரம் மனோகருடன் இருந்துள்ளார் செந்தாமரை. அப்போது, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், சொந்த ஊர் பெங்களூரு என்றும் கூறியிருக்கிறார். அனைத்தையும் மிக பொறுப்பாக கவனித்துக்கொள்ளவே செந்தாமரை மீது பாலச்சந்தருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அளவுக்கு நட்பு பலமானது. இதை பயன்படுத்திக்கொண்ட செந்தாமரை, பாலச்சந்தரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். 
செந்தாமரையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாலச்சந்தர் அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளார். அப்போதுதான், செந்தாமரையின் சொந்த ஊர் பெங்களூரு இல்லை என்பதும், ஈரோடு மாவட்டம் காலிங்கராயபுரம் அவரது சொந்த ஊர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவரவே பாலச்சந்தர் அதிர்ச்சியடைந்தார். அதைவிட அதிர்ச்சியான தகவல், செந்தாமரை காலிங்கராயபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக 2006 முதல் 2016 வரை இருந்துள்ளார் என்பது.
இது குறித்து பாலச்சந்தர் கேட்டபோது, செந்தாமரை மழுப்பலான பதிலை அளித்துள்ளார். கொடுத்த பணத்தைக் கேட்ட போது தருகிறேன் என்று கூறி வேலையைவிட்டு நின்றுவிட்டார். போன் செய்து பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் செந்தாமரை. இதைத் தொடர்ந்து சென்னை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்துள்ளார் பாலச்சந்தர். ஆனால், இந்த புகாரை எடுத்துக்கொள்ள போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

police

இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்துள்ளார் பாலச்சந்தர். பின்னர் இது குறித்து நிருபர்களிடம் கூறியபோது, “திருமணம் செய்துகொள்வதாக கூறி செந்தாமரை என்பவர் என்னிடம் மற்றும் என்னுடைய வாடிக்கையாளர்களிடம் ரூ.7 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் எனக்குத் தெரியவரவே வேலையைவிட்டு நின்றுவிட்டார். பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து புகார் அளித்தேன். ஆனால், அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி புகாரை எடுக்கவிடாமல் தடுக்கிறார். அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.